ஐ.நா மனித உரிமைச்சபை அகண்டதிரையில் அம்பலமாகிய சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம்..!

unமனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட பல்வேறு விடயங்களில் சிறிலங்கா அரசுக்கு சவால்மிகுந்த களமாகவுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையில், இலங்கைத்தீவில் மேலெழும் சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் விவாதப்பொருளாகியுள்ளது.

தென்னாசிய வட்டகையில் மதச்சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து இடம்பெற்றிருந்த உபமாநாடொன்றிலேயே இவ்விவகாரம் பேசப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபையின் மதஉரிமைகளுக்கான சிறப்பாய்வறிஞர் (special rapporteur)Heiner Bielefeldt அவர்களது தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த உபமாநாட்டில் , சிறிலங்கா, இந்தியா , வங்கதேசம் மற்றும் நேபால் ஆகிய நாடுகளில் இருந்து கருத்தாளர்கள் அந்தந்த நாடுகளின் நேரடிச் சாட்சியங்களாக பங்கெடுத்துள்ளனர்.

போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசகட்டமைப்பின் ஓர் ஆயுதமாக, மேலெழுந்துவரும் பௌத்த பேரினவாதிகளின் வன்முறைகள், தமிழ்மொழி பேசுகின்ற அனைத்து மக்களது மத சுதந்திரத்துக்கும், அவர்களது வழிபாட்டு உரிமைகளுக்கும் எதிராக தீவிரமடைந்துள்ள சூழலில் இந்த உபமாநாடு இடம்பெற்றுள்ளது.

மதச்சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தலக்கள் உடல்ரீதியிலான நேரடி வன்முறைகள், பாலியல்வன்முறைகள், கொலைகள், சமூக புறக்கணிப்புகள் ,ஒன்றுகூடுவதற்கான தடைகள், வழிபாட்டுக்கு கடமைகளை நிறைவேற்றுவதற்கான உரிமை மறுப்புகள், கருத்துரிமைகள் என மத சுதந்திரத்துக்கான அடிப்படை மனித உரிமை மீறல்கள் பற்றி இந்த உபமாநாட்டில் கருத்துப்பரிமாறப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply