தமிழீழ விடுதலை புலிகளின் சின்னம் பொறித்த கழுத்துப் பட்டியை அணிந்திருந்ததாக குற்றம் சாட்டி கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த எஸ்.சதீஷ்குமார் என்ற பயிற்றுவிப்பாளரே கைது செய்யப்பட்டுள்ளார்.
நிகழ்வில் கலந்து கொண்டிருந்த குறித்த ஆசிரியரின் கழுத்துப் பட்டியில் தமிழீழம் என்ற எழுத்தும் சின்னமும் இருந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உடனடியாக அப்பகுதிக்கு வந்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் குறித்த பயிற்றுவிப்பாளரை கைது செய்துள்ளனர்.
















