அஜீத்- கவுதம் மேனன் இடையே திடீர் மோதல். த்ரிஷா காரணமா? திடுக்கிடும் தகவல்.

ajith-gautham-menon-trishaஅஜீத், த்ரிஷா, அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் அஜீத் 55 திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில் திடீரென அஜீத்துக்கும், இயக்குனர் கவுதம் மேனனுக்கு சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக அந்த படத்தின் உதவி இயக்குனர் ஒருவர் மறைமுகமாக சமூக வலைத்தளம் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் கோலிவுட் படவுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஜீத் 55 திரைப்படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் இதுவரை எடுத்தவரை இருந்த படத்தை அஜீத்தும் இயக்குனர் கவுதம் மேனனும் போட்டு பார்த்தனர். அதில் த்ரிஷாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து கவுதம் மேனனிடம் அஜீத் ஒருசில கருத்துக்களை கூறினாராம். த்ரிஷாவின் பாகத்தை கொஞ்சம் குறைத்துவிட்டு, அனுஷ்காவின் பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்துமாறு ஆலோசனை கூறினாராம்.

ஆனால் கவுதம் மேனன் இதற்கு உடன்படவில்லை. இந்த படத்தின் முதுகெலும்பே த்ரிஷாவின் கதாபாத்திரம்தான் என்றும், எனவே அந்த பாத்திரத்தின் முக்கியத்துவத்தை குறைக்க முடியாது என்று கூறியதாகவும் தெரிகிறது. இதற்கு எவ்வித பதில் கருத்தும் கூறாமல் அஜீத் அமைதியாக எழுந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருக்கும் ஒருவர் நேற்று சமூக வலைத்தளத்தில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் இன்று காலை முதல் பல ஊடகங்களில் மிகவேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், அஜீத் மற்றும் கவுதம் மேனன் இடையே எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply