ஜப்பானில் கடந்த சில நாட்களாக கேமரா உள்ளடங்கிய ஷூ விற்பனை செய்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த வகை கேமரா ஷுக்களின் மூலம் பெண்களின் அந்தரங்க பகுதிகளை புகைப்படம் எடுத்து இணையத்தில் பரப்பி வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும் ஒருசில கடைகளில் சட்டத்திற்கு விரோதமாக கேமரா ஷுக்கள் ஜப்பானில் உள்ள Kyoto என்ற நகரில் விற்பனை ஆவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால், அதிரடியாக நேற்று போலீஸார் அனைத்து கடைகளிலும் சோதனை செய்தனர். இதில் நூற்றுக்கணக்கான கேமரா ஷுக்கள் கைப்பற்றப்பட்டன.
சோதனையின் போது கேமரா ஷுக்களை விற்பனை செய்தவர்களையு, வாங்குவதற்காக வந்திருந்தவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
குட்டைபாவாடை அணிந்திருக்கும் பெண்களின் அருகே சென்று நைசாக அவர்கள் அருகில் கேமரா ஷுக்களின் மூலம் பெண்களின் அந்தரங்க பகுதிகளை படமெடுத்ததாக இதுவரை நூற்றுக்கணக்கானோர்களை போலீஸார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
















