உலகின் முதல்முரையாக அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கண்ணின் கருவிழியில் டாட்டூ வரைந்துள்ளார். அவருடைய செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த 58 வயது வில்லியம் வாட்சன் என்பவருக்கு சிறுவயதிலேயே ஒரு கண்ணின் பார்வை பறிபோனது. சிறுவயதில் பள்ளியில் விளையாடும்போது, பந்து கண்ணில் பட்டதால், கடுமையாக பாதிக்கப்பட்ட வில்லியம், படிப்படியாக இடது கண்ணின் பார்வையை இழந்தார். அவருடைய இடது கண் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால், அவருக்கு திடீரென அந்த கண்ணில் டாட்டூ வரைய அவர் முடிவு செய்தார்.
உபயோகம் இல்லாமல் இருக்கும் இடது கண்ணை அழகுபடுத்தவே அவர் தன்னுடைய கண்ணின் கருவிழியில் டாட்டு வரைந்ததாக கூறியுள்ளார். Dr Emil Chynn என்பவர் அவருடைய இடது கண்ணில் டாட்டூ வரைய உதவி செய்துள்ளார். இதன்மூலம் உலகிலேயே கண்ணின் கருவிழியில் டாட்டூ வரைந்த முதல் நபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். தற்போது தனது இடது கண் பார்க்க கவர்ச்சியாக இருப்பதாக கூறுகிறார் வில்லியம்.
















