10 வயது மகளுக்காக $100 மில்லியன் வருமானத்தை இழக்க தயாரான தந்தை.

ceo-quits-for-his-10-year-old-daughterஉலகின் மிகப்பெரிய நிதி நிறுவன ஆலோசகராக இருந்த ஒருவர் தனது பத்து வயது மகளுக்காக வேலையை உதறிவிட்டு, தனது மகள் மற்றும் மனைவியுடன் இனி ஜாலியாக காலத்தை கடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் பல முன்னணி நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 56 வயது Mohamed El-Erian, 56, என்பவர் உலகின் மிகப்பெரிய நிதிநிறுவனமான PIMCO investment என்ற நிறுவனம் உள்பட பல நிதி நிறுவனங்களுக்கு நிதி ஆலோசனை செய்து வருகிறார். இவருடைய ஆலோசனையை நம்பி நிதி நிறுவனங்கள் $2 டிரில்லியன் பணத்தை பலவகையிலும் முதலீடு செய்துள்ளன. இவருடைய வருட வருமானம் $100 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வீட்டில் உள்ள தனது தந்தைக்கு இவருடைய பத்து வயது ஒரே மகள் எழுதிய கடித்தத்தில் இதுவரை தான் 28 நிகழ்ச்சியில் தந்தையின் அருகில் இருப்பதை இழந்திருப்பதாகவும், இனியும் இதுமாதிரியான இழப்புகளை தன்னால் சகித்துக்கொண்டு இருக்க முடியாது என்று கூறியுள்ளதால் உடனடியாக அந்த கடித்ததை பார்த்து நெகிழ்ந்த Mohamed El-Erian, தன்னுடைய அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு, இனிமேல் மகள் மற்றும் மனைவியின் சந்தோஷத்திற்காக வாழ இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply