2016ல் விஜய்தான் முதல்வர். விபரீதம் தெரியாமல் ஆட்டம் போடும் விஜய் ரசிகர்கள்.

vijay-cm-tnஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் தீர்ப்பு குறித்து தங்கள் அதிருப்திகளை இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளிப்படுத்தி வரும் நிலையில் ஒரு சிலர் இந்த தீர்ப்பு காரணமாக தங்கள் மகிழ்ச்சியை அதே இணையதளங்களில் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் விஜய் ரசிகர்கள் என்றால் அது மிகையாகாது.

தங்கள் தலைவனின் திரைப்படங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஜெயலலிதா காரணம் என்று இவர்களாகவே கற்பனை செய்துகொண்டு மனம்போன போக்கில் ஒருசிலர் தவறான கருத்துக்களை ஜெயலலிதாவுக்கு எதிராக தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை ஜெயலலிதா மீண்டும் ஜாமீனிலோ அல்லது குற்றவாளி அல்ல என்று மேல்கோர்ட்டில் தீர்ப்பு பெற்று வந்தால் அதனால் என்ன விளைவு நடக்கும் என்ற விபரீதம் புரியாமல் விசிலடிச்சான் குஞ்சுகள் உளறிவரும் இதுபோன்றவர்களை விஜய் அடையாளம் கண்டுகொண்டு அவர்களை ஒதுக்கி வைக்க விஜய் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றே உண்மையான விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2016ல் தங்கள் தலைவர் விஜய்தான் முதலமைச்சர் என்கிற ரீதியில் இவர்கள் தெரிவித்து வரும் கருத்துக்கள் வேடிக்கையாகவும் விநோதமாகவும் உள்ளது. ஒருசில படங்கள் வெற்றி பெற்று சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்றுவிட்டால் உடனே முதல்வர் கனவு காணும் கோமாளித்தனம் தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் நடக்காது. உண்மையான சூப்பர் ஸ்டாரே அரசியலுக்கு வர தயங்கிவரும் நிலையில் சூப்பர் ஸ்டார் என தனக்கு தானே பணம் கொடுத்து பட்டம் பெற்ற நடிகர் முதல்வர் கனவு காண்பது கொடுமையிலும் கொடுமை. வாக்களிக்கும் வயசுக்கே வராத இதுபோன்ற பொடியன்களின் அலப்பறையை விஜய் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான சினிமா ரசிகர்கள் எண்ணமாக உள்ளது.

விஜய் ஒரு சிறந்த நடிகர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அரசியல் என்பது ஒரு பெரிய கடல். அதில் நீந்தி பிழைத்த அரசியல்வாதிகளின் எண்ணிக்கையைவிட மூழ்கி பலியானவர்கள்தான் அதிகம், சிவாஜி, பாக்யராஜ், ராஜேந்தர், சிரஞ்சிவி, விஜயகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வந்து பட்ட அவமானங்கள் விஜய்க்கு தேவையில்லை. அவர் ஒரு சிறந்த நடிகராகவே தொடரத்தான் தமிழக மக்கள் விரும்புகின்றனர். இதை அவர் புரிந்துகொண்டால் அவருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் நன்மை பயக்கும்.

Tags: , ,

Leave a Reply