வாடிகான் பாதிரியார் வீட்டில் 100,000 ஆபாச படங்கள். அதிர்ச்சி தகவல்

vatican-paedophilla-scandalவாடிகான் நாட்டில் உள்ள சர்ச் ஒன்றின் பாதிரியார் தனது கம்ப்யூட்டரில் சுமார் 100,000 ஆபாச படங்களும் வீடியோக்களும் வைத்திருந்ததாகவும், அவற்றில் பெரும்பாலானவை குழந்தைகளின் ஆபாச படங்கள் என்றும் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது அந்த பாதிரியாரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வாடிகான் நாட்டில் உள்ள Dominican Republic, என்ற பகுதியில் உள்ள சர்ச் ஒன்றின் பாதிரியாராக இருப்பவர் 66வயது Jozef Wesolowski என்பவர். இவர் மீது சமீபத்தில் சுமத்தப்பட்ட செக்ஸ் குற்றச்சாட்டு காரணமாக அதிரடியாக இவருடைய வீட்டை சோதனை செய்தபோது அவருடைய கம்ப்யூட்டரில் சுமார் ஒருலட்சம் ஆபாச படங்களும் வீடியோக்களும் இருப்பது கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சர்ச்சுக்கு வரும் சிறுவர்களையும், சிறுமிகளையும் அவர் தவறாக உபயோகப்படுத்தியிருப்பது தெரியவட்ந்ஹது. தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? அவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: , ,

Leave a Reply