ஜெயலலிதாவுக்கு ஆதரவாக களமிறங்கும் திரையுலகம். தியேட்டர்களில் காட்சிகள் ரத்து, உண்ணாவிரதம்.

jayalalitha-jail-theatres-closedசொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த சனிக்கிழமை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான்கு வருட சிறைத்தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் நான்கு காட்சிகள் ரத்து செய்யப்படும் என்றும், நாளை ஒருநாள் திரையரங்கு உரிமையாளர்கள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று காலை நடந்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமை தாங்கினார். இந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் உள்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தியேட்டர் உரிமையாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராடுவதற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

திரையரங்கு உரிமையாளர்களின் போராட்ட அறிவிப்பை அடுத்து கோலிவுட்டில் உள்ள அனைத்து சங்கங்களும் போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகின்றன. தனித்தனியாகவோ அல்லது ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமோ போராட்டங்கள் நடத்த ஆலோசனை நடந்து வருவதாக கோலிவுட்டில் செய்திகள் பரபரப்பாக வெளிவந்துள்ளன.

Tags: , ,

Leave a Reply