வவுனியா விபத்தில் ஒருவர் படுகாயம்
வவுனியா, கொக்குவெளி பிரதேசத்தில் இன்று (30) இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
பட்டானிச்சூரை சேர்ந்த எம்.இர்பான் என்பவரே ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இராணுவ வாகனமொன்றின் பின்னால் மோதுண்டு விபத்துக்குள்ளகியுள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்த அவரை உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
















