விஜயதசமி விடுமுறைக்கு அஞ்சான் திரைப்படம் ஒளிபரப்ப உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு சன்டிவியில் முன்னோட்டம் போட்டார்கள். திடீரென்று என்ன ஆச்சோ?, ஏது ஆச்சோ? சூர்யாவின் இடத்தை வடிவேலு பிடித்துவிட்டார். அஞ்சான் படம் ஒளிபரப்பாகும் என்று சொல்லப்பட்ட நேரத்தில் வடிவேலு நடித்த தெனாலிராமன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
சன் டிவியில் ஆயுதபூஜை தினத்தன்று நான் ஈ, பிரியாணி, பிரம்மா, ஆகிய மூன்று படங்கள் ஒளிபரப்பாகின்றன. விஜயதசமியான வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணிக்கு மீண்டும் அம்மன், மதியம் தனுஷ் நடித்த வேங்கை, மாலை 6 மணிக்கு வடிவேலு நடித்த தெனாலிராமன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
விஜயதசமி தினத்தன்று சூர்யா, சமந்தா நடித்த அஞ்சான் திரைப்படம் ஒளிபரப்பாகும் என சில தினங்களுக்கு முன்னர் முன்னோட்டம் போட்டனர். இந்தப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று ரிலீஸ் ஆனது. அதற்குள் டிவியில் ஒளிபரப்புகின்றனரே என்று கூறப்பட்ட நிலையில் திடீரென்று சூர்யாவின் இடத்தை வடிவேலு பிடித்துக்கொண்டார். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளதால் அஞ்சானை தீபாவளியன்று ஒளிபரப்பலாம் என்று ஒதுக்கிவிட்டார்களோ என்னவோ? எப்படியோ விஜயதசமி அண்ணன் சூர்யா வராவிட்டாலும் ஆயுதபூஜைக்கு தம்பி கார்த்தி வருகிறாரே என்கின்றனர் சினிமா ரசிகர்கள்.
















