சிரியா பள்ளிகளில் குண்டுவெடித்து 41 மாணவர்கள் பலி. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கைவரிசையா?

syria-school-bomb-blastசிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகளை நோக்கி அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டு வரும் நிலையிலும், தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டே உள்ளது. நேற்று சிரியாவில் அரசுப் பள்ளி ஒன்றில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 41 குழந்தைகள் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இந்த தகவலை மனித உரிமைகள் அமைப்பும் உறுதி செய்துள்ளது.

சிரியாவின் கோம்ஸ் நகரில் இயங்கிவரும் அரசுப் பள்ளி ஒன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் இரண்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். இந்த வெடிகுண்டு வெடித்ததன் காரணமாக அப்பள்ளியில் கல்வி பயின்று கொண்டிருந்த 41 பிஞ்சுக் குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

மேலும் பல மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு நடந்தபோது ஏற்பட்ட பரபரப்பில் பல மாணவர்களைக் காணவில்லை என்றும் புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை எனினும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் வேலையாகத்தான் இது இருக்கும் என சிரியா அரசு உயரதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply