பாக். போர் விமானங்கள் தீவிரவாதிகள் மீது குண்டு மழை: 15 பேர் பலி…

flight2பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் கைபர் பழங்குடியினர் பகுதி உள்ளது. இது பாகிஸ்தானின் ஏழு சுயாட்சிப் பகுதிகளில் ஒன்றாகும். பழங்குடியினர் பெருவாரியாக வாழ்கிற இந்தப் பகுதி, தீவிரவாதிகளின் புகலிடமாக திகழ்கிறது.

இங்கு அமைந்துள்ள ஜாம்ருத், பாரா பகுதிகளில் தீவிரவாதிகளை குறிவைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் நேற்று காலை குண்டு மழை பொழிந்தன. இதில் தீவிரவாதிகளின் 3 மறைவிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக அந்த நாட்டு அரசு மேற்கொண்டு வருகிற ‘ஜார்ப் இ அஜ்ப்’ என்னும் நடவடிக்கையின் ஒரு அங்கமே, இந்த குண்டு வீச்சு என தகவல்கள் கூறுகின்றன.

Tags: , ,

Leave a Reply