பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை தொடங்கியது…

jayalalitha-new-1-600பெங்களூர்: பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை தொடங்கியது. முன்னதாக பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு விசாரணையை முதல் மனுவாக விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகி ஜெயலலிதா மனுவை அவசர மனுவாக கருதி உடனே விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்தார். வரிசைப்படியே ஜெயலலிதா மனு விசாரிக்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 73வது வழக்காக ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மனு மீது விசாரணை தொடங்கிய பின் ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான ராம்ஜெத்மலானி, பி.குமார் உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடி வருகின்றனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானிசிங் ஆஜரானார்.

கர்நாடக உயர் நீதிமன்றம், பரப்பன அக்ரஹார சிறை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள தனி நீதிமன்றத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.44 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா செப்டம்பர் 27ம் தேதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூர் புறநகரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராம்ஜெத்மலானி வாதம்

அரசு தரப்பு கருத்தை கேட்காமல் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்லாம் என்று கூழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வாதிட்டுள்ளார்.

சிறையில் 11வது நாள்

பெங்களூர் சிறையில் ஜெயலலிதா காவலில் வைக்கப்பட்டு 11 நாள் ஆகிறது. கடந்த 27ம் தேதி தீர்ப்பு கூறியவுடன் ஜெயலலிதா சிறையில் வைக்கப்பட்டார். ஜெயலலிதா சிறை வைக்கப்பட்டுள்ள பெங்களூர் அக்ரஹார சிறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அங்கு 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது.

பவானி சிங் எதிர்ப்பு

அரசு தரப்பு கருத்தை கேட்காமல் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்லாம் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் வாதத்திற்கு அரசு வழக்கறிஞர் பவானிசிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply