ஜெயலலிதாவிற்கு பிணை கோரி உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்…!!

high-court-indiaசொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு பிணை வழங்குமாறு கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா​ ஜெயராம் உள்ளிட்ட நால்வரையும் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கமைய கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவின் உத்தியோகபூர்வ நகல் பெறப்பட்டு இன்று இந்திய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என தமிழகத்தின் முன்னாள் முதல்வர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்திலும் ஜெயலலிதா ஜெயராம் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ராம்ஜெத்மலானி தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் ஆஜராவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா ஜெயராம் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரோடு நான்கு நான்கு வருட சிறைதண்டனையும் தலா 10 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்.

ஜெயலலிதா ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்ட கடந்த 27 ஆம் திகதி தொடக்கம் தமிழகம் முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: , ,

Leave a Reply