மனிதாபிமானமற்ற முறையில் கைதிகள் சித்திரவதை: இரு பொலிஸாருக்கு ஏழு வருட சிறை

police424-600கைதிகள் இருவரை மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர்களுக்கு ஏழு வருட சிறைத் தண்டனை விதித்து பதுளை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

2007 ஆம் ஆண்டு மஹியங்கனை- பஹரகம்மன பிரதே சத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் மேற்படி இரண்டு பொலிஸ் அதிகாரிகளாலும் மனிதாபிமான மற்ற முறையில் தாக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட கைதிகளால் குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கினை நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி மேற்படி தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
சம்பவத்தின்போது இரு பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர்களும் மஹியங்கனை பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply