மேஷம்: இன்று, உங்கள் மனதில் உற்சாகமும், நேர்த்தியும் நிறைந்திருக்கும். உறவினர் முன்பு கேட்ட உதவியை மனமுவந்து வழங்குவீர்கள். தொழிலில் அதிக நேரம் பணிபுரிந்து திருப்திகரமான அளவில் வளர்ச்சி பெறுவீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.
மிதுனம்: இன்று, சமயோசிதமாக செயல்படுவீர்கள். எதிரியால் உருவான தொல்லை, வந்த சுவடு தெரியாமல் மாறிவிடும். தொழில், வியாபாரம் செழித்து திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும், வீட்டுக்கு தேவையான பொருள் வாங்குவீர்கள்.
கடகம்: இன்று, உங்கள் வாழ்வில் முன்னர் தொல்லை கொடுத்தவர் இடம் மாறி போகும் நன்னிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி பெற, புதிய திட்டம் செயல்படுத்துவீர்கள். முயற்சி சிறந்து ஆதாய பணவரவை தரும். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். பெண்களுக்கு, தாய்வீட்டு உதவி கிடைக்கும்.
சிம்மம்: இன்று, அவசரகதியில் கூடுதல் பணி உருவாவதால் சிரமம் வரலாம். நண்பரின் ஆலோசனை நல்வழி காட்டும். தொழில்,வியாபாரத்தில் உள்ள நிலுவைப் பணியை நிறைவேற்றுவது அவசியம். பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும். திட்டமிட்ட வெளியூர் பயணத்தில் மாறுதல் செய்வீர்கள்.
ரிஷபம்: இன்று, உங்கள் பணியில் கூடுதல் கவனமுடன் செயல்படுவது அவசியமாகும். நல்லவர்களின் ஆலோசனைப்படி நடப்பதால் தொழில், வியாபாரம் நடைமுறை சுமுகமாக இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். செலவுகள் சிக்கனம் பின்பற்றுவது நல்லது. காலமுறை உணவுப்பழக்கம் உடல்நலம் பாதுகாக்க உதவும்.
கன்னி: இன்று, சிலர் பொறாமை குணத்துடன் உங்களை ஏளனமாக பேசும் நிலை வரலாம். நியாய, தர்மம் உறுதியுடன் பின்பற்றுவதால் சிரமம் தாமாக விலகும். தொழில், வியாபாரம் சீராக இருக்க தகுந்த பணி புரிவீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு வகை உண்பதை தவிர்க்கவும்.
துலாம்: இன்று, நீங்கள் தன்னைச் சார்ந்தவர்களின் நலன் சிறக்க இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய அனுகூல சூழ்நிலை உருவாகும். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணம் வசூலாகும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி வளரும்.
விருச்சிகம்: இன்று, உங்கள் மனதில் சாந்த குணமும், செயல்களில் அதிக பொறுப்புணர்வும் நிறைந்திருக்கும். சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் வியத்தகு அளவில் வளர்ச்சி பெறும். கூடுதல் பணவரவில் சேமிப்பை அதிகரிப்பீர்கள். குடும்பத்தில் நீண்ட நாள் பிரச்னைக்கு சுமுகத்தீர்வு வந்து சேரும்.
தனுசு: இன்று, உங்கள் பேச்சு, செயலை குறை சொல்லும் எண்ணத்துடன் சிலர் நடந்து கொள்வர்; அவர்களிடமிருந்து விலகுவதால் மன அமைதியை பாதுகாக்கலாம். தொழில், வியாபாரம் மந்தகதியில் இயங்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள், பாதுகாப்பு நடைமுறைகளை கவனமுடன் பின்பற்றவும்.
மகரம்: இன்று, உங்களின் கடந்த கால சிரமம் குறித்து பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபார நடைமுறை சீராக புதிய யுக்தியை பின்பற்றுவது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். முக்கியமான செலவுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். போக்குவரத்தில் கவனநடை நல்லது.
கும்பம்: இன்று, ஆர்வம் நிறைந்த மனதுடன் செயல்படுவீர்கள். உழைப்பிற்கான நற்பலன் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உருவாகும் வளர்ச்சி நிலையை உங்கள் நலன் விரும்புவர் பாராட்டுவர். தாராள பணவரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர்.
மீனம்: இன்று, நீங்கள் பொது இடங்களில் அதிகம் பேசுவதும், வேடிக்கை பார்ப்பதும் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சீர்திருத்தம் பின்பற்றி உற்பத்தி விற்பனையை அதிகரிப்பது அவசியமாகும். பணவரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். சுற்றுப்புற சூழ்நிலையினால் நித்திரை கெடலாம்.
















