ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் பொதுவேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு?

tamil-news-ranilஐக்கிய தேசிய கட்சி சார்பில் பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்க்கு அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை கட்சி வெள்ளிக்கிழமை முன்மொழிந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல்விடயங்களை கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட 20 பேர் கொண்ட குழுவுடனான சந்திப்பின்போது இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது பிரதித்தலைவர் சஜித் பிரேமாதாசா ரணில் விக்கிரமசிங்கவால் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தை உறுதிப்படுத்தமுடியுமா என இந்த கூட்டத்தில் கோரியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க இதற்க்கு இணங்கியதை தொடர்ந்து கட்சி ரணிலை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று சஜித் உத்தரவிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க மகிந்தவை எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டதால், எமது வாக்காளர்களை ஊகத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை, அரசாங்கம் தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரே அதன் வேட்பாளர் என்பது மக்களுக்கு தெரியவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க போன்றவர்கள் ஏனைய கட்சிகளின் நிலைப்பாட்டை அவதானித்த பின்னர் இது குறித்து தீர்மானிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply