இலங்கை அரசாங்கத்தின் தடையை பிரித்தானியா நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது.
எனினும், இந்தத் தடைகளை கருத்திற் கொள்ளாது பிரித்தானிய அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றது.
அண்மையில் க்ளோபல் தமிழ் போரம் உள்ளிட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு நடத்தியிருந்தார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது அரசாங்கம் விதித்துள்ள தடைகளை சர்வதேச சமூகம் பெரிதாக கொள்ளவில்லை என க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன் ஓர் கட்டாகவே அண்மையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயர் தம்மை சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
















