நடிகை சன்னிலியோனுடன் பிரபல காமெடி நடிகர் திருமணம்.

sunny-leone-ali-marriageநாக சைதன்யா மற்றும் பூஜா ஹெக்டே நடித்த Oka Laila Kosam என்ற திரைப்படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவினை பிரபல காமெடி நடிகர் அலி தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் இடையே திடீரென மேடைக்கு வந்த படத்தின் நாயகன் நாக சைதன்யா, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அலி என்பவருக்கும் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கும் சமீபத்தில் ரகசிய திருமணம் நடந்ததாகவும், அதற்குரிய ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறி ஒரு புகைப்படத்தை எடுத்து மேடையில் இருந்தவர்களிடம் காண்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாகசைதன்யாவின் அதிரடியால் காமெடி நடிகர் அலி அதிர்ச்சி அடைந்துவிட்டார். மேலும் அந்த ஆடியோ நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டதால் வீட்டில் இருந்து தனது மனைவியும் குடும்பத்தினர்களும் பார்த்துக்கொண்டிருப்பார்கள். எனவே உண்மையை சொல்லிவிடுங்கள் என்று அலி கெஞ்சியதும், அதன் பின்னர் நாகசைதன்யா, ‘அலி மற்றும் சன்னிலியோன் திருமண கோலத்துடன் இருக்கும் அந்த ஸ்டில் விரைவில் ரிலீசாகவுள்ள ஒரு திரைபடத்திற்காக ரகசியமாக எடுக்கப்பட்ட காட்சிகள் என்றும், அந்த ரகசிய படப்பிடிப்பை அறிந்து அதன் புகைப்படத்தை கைப்பற்றி தான் விளையாட்டிற்காக இந்த மேடையில் வெளியிட்டதாகவும் கூறினார். அதன்பின்னர்தான் காமெடி நடிகர் அலி, நிம்மதி பெருமூச்சு விட்டார்.

Oka Laila Kosam திரைப்படம் வரும் அக்டோபர் 17ஆம் தேதி ஆந்திரா முழுவதும் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags: , ,

Leave a Reply