‘மம்மி ரிட்டர்ன்ஸ்': இது ட்விட்டர் கொண்டாட்டம்

mummy-returns324-600ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதை அதிமுகவினர் ஒரு பக்கம் கொண்டாட மறுபக்கம் மக்கள் ட்விட்டரில் மம்மி ரிட்டர்ன்ஸ்(mummy returns) என்று ட்வீட் செய்து வருகிறார்கள். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 27ம் தேதியில் இருந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். இந்நிலையில் அவரது ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதை அதிமுகவினர் கொண்டாடி வரும் நிலையில் மக்கள் ட்விட்டரிலும் கொண்டாடி வருகிறார்கள்.

அம்மா மறுபடியும் வந்துவிட்டார் #mummy returns என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

பட்டாசு மற்றும் ஸ்வீட் கடைக்காரங்களுக்கு மட்டும் ரெண்டு தீபாவளி…. :) #mummy returns

கலையில 8 மணிக்கே திருவிழா மாதிரி கூட்டம் இருந்துச்சு ஜெயில் முன்னாடி, இப்போ சொல்லவா வேணும் #mummy returns

ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த முக்கியமான நேரத்தில் தமிழகத்திற்கு அவர் தேவை #mummy returns

அம்மா ரிலீஸ் சென்னைல மழை. அந்த தூதுவன் வருவன் மாரி பெய்யும் தருணம்#mummy return

Tags: , ,

Leave a Reply