எதிர்காலத்தை சரியாக கணித்து கூறும் நாத்திகர் கமல்

anbesivam-kamalநமது வாழ்க்கையில் எதிர்காலத்தில் என்னென்ன நடக்கப்போகிறது என்பதை மிகவும் துல்லியமாக கூறுவதில் வல்லவர்கள் ஜோசியர்கள். ஆனால் கமல்ஹாசன் எதிலும் வித்தியாசமானவர் ஆயிற்றே. நாட்டில் அல்லது உலகில் எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என்பதை தீர்க்கதரிசமான கூறுவதில் வல்லவர் என்பது தற்போது நிரூபணம் ஆகிக்கொண்டே வருகிறது. இவரை இந்தியாவின் நாஸ்டர்டாம் என்று சொன்னால் அது மிகையில்லை.

கமல் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தில் சுனாமி என்கிற வார்த்தை வசனமாக வரும். அதுவரை சுனாமி என்றாலே என்னவென்றே இந்தியாவில் யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் 2004ஆம் ஆண்டு டிசம்பரில் உண்மையாகவே சுனாமி வந்தபிறகுதான் கமல் ஒரு வருடத்திற்கு முன்பே சுனாமி குறித்து தனது படத்தில் கூறியிருந்தது பின்னாளில் தெரியவந்தது.

அதேபோல் தசாவதாரம் படத்தில் ஒர் வசனம் உண்டு. “எபோலா-மார்பர்க் வைரஸ் இணைந்த ஆபத்தான பயோ ஆயுதம்” . தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் எபோலா நோய் குறித்து கடந்த 2008ஆம் ஆண்டிலேயே தனது திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளார் கமல்ஹாசன்.

உண்மை வாழ்க்கையில் அவர் ஒரு நாத்திகராக இருப்பினும் உண்மையில் எதிர்காலத்தை கணித்து கூறும் ஒரு ஜோசியர்தான் கமல். இன்னும் என்னென்ன தீர்க்கதரிச வசனங்களை அவர் தனது படங்களில் சொல்லி வைத்திருக்கின்றார் என்று தெரியவில்லை. அந்த சம்பவங்கள் நடைபெறும்போதுதான் நமக்கு அதுகுறித்து தெரியவரும்.

Tags: ,

Leave a Reply