மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்களின் நட்பு கிட்டும்.
வியாபாரத்தில் கமிஷன், உணவு, புரோக்கரேஜ் வகை களால் லாபமடைவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
ரிஷபம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். அக்கம்,பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வேற்றுமதத்தவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.
மிதுனம்
மிதுனம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர் களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
கடகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
சிம்மம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வரு வார்கள். புதிய யோசனைகள் பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
கன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சுலபமாக முடிக்க வேண்டிய சில காரியங்களை பெரும்போராட்டத்திற்குப் பிறகு முடிக்க வேண்டி வரும். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
துலாம்: கணவன்,மனைவிக் குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்: குடும்பத்தினரு டன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நெருங்கியவர் களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களால் ஆதாயம் உண்டு. சிறப்பான நாள்.
தனுசு: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக் கேற்ப மாற்றிக் கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் செழிக்கும். முயற்சியால் முன்னேறும் நாள்.
மகரம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.
கும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
மீனம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலா கும். திறமைகள் வெளிப்படும் நாள்.
















