ஜெனீவாவை இலக்கு வைக்கும் இலங்கை அரசு

un-human-rights-council_0காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இடைக்கால விசாரணை அறிக்கையை 2015 பெப்ரவரி இறுதி வாரத்தில் வெளியிடவுள்ளதாக ஆணைக் குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். மேற்படி விசராணைக்குழு தனது இடைக்கால அறிக்கையை அடுத்த மாதம் வெளியிடுவதற்கு முன்ன தாக உத்தேசித்திருந்தாலும் அதன் விடயப்பரப்பு உள்ளகப் போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்கும் வகையில் விரிப்படுத்தப்பட்டதாலேயே இடைக்கால அறிக்கை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை முல்லைதீவில் நடைபெறவுள்ள மக்கள் அமர்வு முடிவடைந்த பின்னர் அறிக்கை தயாரிக்கும் பணிகள் விரைவுப்படுத்தப்படவுள்ளன.

இதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியும் பெறப்படவுள்ளது. அதே வேளை காணாமல் போனோர் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள 19 ஆயிரம் முறைப்பாடுகள் 14 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வெளிவிகார , அமைச்சசின் உதவியை நாடியுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு அவற்றை வெளிவிவகார அமைச்சிடம் அண்மையில் ஒப்படைத்துள்ளது. 2015 மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரை இலக்கு வைத்துதான் இந்த அறிக்கை குறித்த காலப்பகுதியில் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply