ராஸபக்ஸக்களின் கைகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் நீதித் துறை

rajapaksa-familyகொழும்பு, கொம்பனித்தெரு, மோகன் வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில்

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கும் தேசிய ஊழியர் சேவைச் சங்கத்தின் இருவருக்கும் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, இன்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களான, ரவி கருணாநாயக்க, ஆர்.யோகராஜன், அஜித் பெரேரா மற்றும் நலின் பண்டார ஆகியோரை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கொழும்பு துறைமுகத்திலுள்ள பாதுகாப்பு கல்லூரியொன்றில் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறியே, மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்றிருந்தனர்.

இதன்போது, அவர்களின் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply