அமெரிக்க நிறுவனமொன்றுடன் கைகோர்க்கும் இலங்கை- பெருந்தொகை பணம் செலவீடு

usa-srilankaஇலங்கையின் நன்மதிப்பை உயர்த்தும் வகையில் அமெரிக்காவின் எட்டாவது பொதுமக்கள் உறவு நிறுவனம் ஒன்றுடன் இலங்கை அரசாங்கம் ஆலோசனை பெறவுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

லெவிக் என்ற இந்த நிறுவனம், லிபர்ட்டி இன்டர்நெசனல் குரூப் நிறுவனத்தின் உப குத்தகை அடிப்படையில் இலங்கையின் மத்திய வங்கிக்கு உதவவுள்ளது.

இந்த நிறுவனம் இலங்கை மத்திய வங்கிக்கு தகவல் தொடர்புகள் என்ற அடிப்படையில் உதவிகளை வழங்கவுள்ளது.

இதன்மூலம் போரின் பின்னர் இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என்று இலங்கை மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.

இந்த தகவல்களை அமெரிக்க இணையம் ஒன்று நேற்று வெளியிட்டுள்ளது.

குறித்த நிறுவனத்துடன் இலங்கை செய்துக்கொண்டுள்ள உடன்படிக்கையின்படி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2015 ஜூலை வரைக்குமான காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கிக்கு தகவல் தொழில்நுட்பம் தொடர்பில் ஆலோசனை வழங்கப்படும்.

இதற்காக மாதாந்தம் 60 ஆயிரம் டொலர்கள் என்ற அடிப்படையில் இலங்கை லெவிக் நிறுவனத்துக்கு செலுத்தவுள்ளது.

ஏற்கனவே இலங்கை, அமெரிக்காவில் தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்வது உட்பட்ட நோக்கங்களுக்காக 7 நிறுவனங்களுடன் பெருந்தொகை நிதிகளை செலவழித்து உடன்படிக்கைகளை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் இலங்கையின் எதிர்க்கட்சிகளும் அரசாங்கம் மீது பாரிய குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன.

Tags: , ,

Leave a Reply