அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அலட்சியம் – அடிமை போல் வாழும் புகலிடக் கோரிக்கையாளர்கள்

australianகடந்த 2 வருடங்களாக புகலிடம் கோரி அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் வந்தவர்களை, இது வரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அடிமை போல் வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் அநேகமானோரின் விசாக்கள் முடிவடைந்தும் இதுவரைக்கும் புதிப்பிக்கவும் இல்லை.

படகில் வந்ததன் காரணமாக தற்போது அகதிகள் இருக்கின்றரர்களா என்ற ஒரு பாரிய கேள்வி உருவாகி உள்ளது.

இதன் அடிப்படையில் எங்களுக்கு விரும்பினால் நேரம் இருந்தால் அகதிகளின் விண்ணபம் பரிசீலிக்கப்படும். இல்லையேல் சொந்த நாட்டுக்கு போகலாம் என்ற அடிப்படியில் அகதிகளை கையாளும் விதம் மிகவும் வேதனை அளிப்பதாக புகலிடம் கோருவோர் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் உயர் நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையாளர் அறிவிப்பு என்பனவற்றுக்கு மதிப்பளிக்காமல் அகதிகளை அடிமை போல் நடத்தப்படுகின்றனர்.

இதன் காரணமாக மிகவும் மோசமான நிலையில் புகலிடம் கோருவோரின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அகதி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: ,

Leave a Reply