கட்சி பணத்தில் மேக்கப் பொருட்கள் வாங்கிய ஜப்பான் பெண் அமைச்சர் ராஜினாமா.

japan-mpகட்சியின் வளர்ச்சிக்காக வாங்கிய நன்கொடை பணத்தை, தனது மேக்கப் மற்றும் அழகு சாதன பொருட்களை வாங்க பயன்படுத்திய ஜப்பானின் பெண் அமைச்சர் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்று எழுந்ததை அடுத்து நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஜப்பானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் பிரதமர் ஷின்சோ அபே தலைமையில் தொழில்துறை அமைச்சராக கடந்த 2012ஆம் ஆண்டு பதவியேற்ற யூகோ ஒபுச்சி என்ற பெண் அமைச்சர், கட்சிக்கு வந்தா ஏராளமான பணத்தை மேக்கப் மற்றும் ஏராளமான அழகு பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டு குறித்து நேற்று டோக்கியோவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விசாரணை நடந்தது. தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு அபாண்டமானது என்று கூறிய அமைச்சர் யூகோ ஒபுச்சி, தான் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை அமைச்சர் பதவியில் இருக்கபோவதில்லை என்று கூறிவிட்டு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஜப்பன் பிரதமர் ஷின்ஷோ அபே ஏற்றுக்கொண்டார்.

கட்சிக்கு வந்த நன்கொடை பணத்தை பெண் அமைச்சர் அழகு சாதன பொருட்கள் வாங்க பயன்படுத்தினாரா என்பதை கண்டறிய ஒரு குழு அமைக்கப்பட விருப்பதாகவும், அந்த குழு விசாரணை செய்து தரும் அறிக்கைக்கு பிறகு ஒபுச்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜப்பான் பிரதமர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply