டுவிட்டர் இணையதளத்தை ஸ்தம்பிக்க வைத்தது அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’

ajith-gautham-menon-trishaகவுதம்மேனன் இயக்கத்தில் அஜித்,அனுஷ்கா,த்ரிஷா நடித்து வந்த பெயரிடப்படாத படத்திற்கு ‘என்னை அறிந்தால்’ என்று தலைப்பு இடப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என கடந்த சில மாதங்களாக அஜீத்துடன் ஆலோசனையில் இருந்த இயக்குனர் கவுதம் மேனன், தற்போது ‘என்னை அறிந்தால்’ பெயரை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

இந்த படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் இந்த படத்தின் தலைப்பை அரிவித்ததாகவும், இந்த படத்தின் தலைப்பே படத்தின் கதையை எதிர்பார்க்க வைத்திருப்பதாகவும் கவுதம் மேனன் கூறியுள்ளார்.

இந்த படத்தின் தலைப்பு அக்.30-ம் தேதி அறிவிக்கப்படும் என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கவுதம் மேனன் அறிவித்ததை போல, மிகச்சரியாக 12:00AM மணிக்கு படத்தின் தலைப்பு ‘என்னை அறிந்தால்’ என்று அறிவிக்கப்பட்டது.

படத்தின் தலைப்பு அறிவிப்பு வெளியானது முதல், #YennaiArindhaal என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாக மாறிவிட்டது. இந்திய அளவில் முதலிடத்திலும் உலக அளவில் இரண்டாவது இடத்திலும் இந்த டிரெண்ட் உள்ளது.

படத்தின் தலைப்புக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அஜீத் தனது டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply