நிருபருடன் மோதல் விவகாரம்: மாமியார் சோனியாவிடம் விளக்கமளித்த மருமகன்…!

sonia-gandhiடெல்லியில் இரு தினங்களுக்கு முன்பு தனியார் ஓட்டல் ஒன்றில் நிருபரின் மைக்கை தட்டி விட்டு ஆவேசமடைந்த மருமகன் ராபர்ட் வதேராவை காங்கிரஸ் தலைவர் சோனியா சந்தித்து பேசினார். டெல்லியில் ஓட்டல் ஒன்றில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த ராபர்ட் வதேராவிடம் நிருபர் ஒருவர் அரியானா நில பேர ஊழல் விவகாரம் குறித்து கேள்வி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த வதேரா நிருபரின் மைக்கை ஆவேசமாக தட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த விவகாரம் தொலைகாட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது ஒரு தனியார் நிகழ்ச்சி அதில் நிருபர் யாரையும் சந்திக்கவில்லை என வதேரா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் வதேரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் வதேராவுக்கு ஆதரவாக காங்கிரஸ் களம் இறங்கியது. கேள்வி கேட்ட நிருபர் தனிப்பட்ட முறையில் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீக்ஷீத் குற்றம் சாட்டியுள்ளார்.பிரியங்காவுடன் அவர் பயணம் செய்ய வேண்டியிருக்கும் என்பதால் வதேராவுக்கும் எப்போதும் இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ளது. இதனால் அவரை சுற்றி 36 கமாண்டோ பாதுகாவலர்கள் இருப்பர்.இந்த சூழலில் நேற்று வதேராவை அவரது வீட்டில் சோனியா சந்தித்து விசாரித்தார். அப்போது சோனியாவிடம் ஓட்டலில் நடந்த விவரங்கள் குறித்து வதேரா விளக்கம் அளித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply