இனிமேல் ஓட்டலில் ரூம் எடுத்தால் ரூம் கதவை திறப்பதற்கு சாவி தேவையில்லை. புதிய டெக்னாலஜியில் ஆப்ஸ் மூலம் நம்முடைய ஸ்மார்ட்போனின் மூலமே நமது அறையின் கதவை திறக்கலாம், மூடலாம். இந்த புதிய வசதியை அமெரிக்காவில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்று இன்று ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள Marriott International என்ற ஓட்டல் உலகம் முழுவதும் தனது கிளைகளை கொண்டுள்ளது. இந்த ஓட்டலில் தற்போது புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஓட்டலில் ரூம் புக் செய்பவர்களுக்கு அவர்களுடைய மொபைல் போனில் புளூடூத் மூலம் ஒரு ஆப்ஸை கொடுத்துவிடுவார்கள். அந்த ஆப்ஸில் அவர்களுடைய அறை எண் மற்றும் அனைத்து விவரங்களும் இருக்கும்
ரூம் புக் செய்தவர் தங்களுடைய அறையின் முன் நின்று, செல்போனை கதவருகே காண்பித்தாலே போது, ரூம் கதவு திறந்துவிடும், அதேபோல் கதவை மூடவும் செய்யலாம். இந்த புதிய டெக்னாலஜி மூலம் திருட்டு நடப்பதை 100% தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்காவில் மட்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தவசதி இந்த வருட இறுதிக்கும் உலகமெங்கும் உள்ள 4000 Marriott International ஓட்டல்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
















