மகிந்தவை தூக்கிவிட்டு இந்தியாவிற்கு சாதகமானவரை கொண்டுவர வேண்டும் : இளங்கோவன்

mahinthaஇலங்கையில் தமிழர் நலனுக்கும் இந்தியாவுக்கும் எதிராக இருக்கும் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து மத்திய அரசு அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன் கூறியதாவது :-

தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமையும். அல்லது காங்கிரஸ் ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகும். எங்களைப் பொறுத்தவரை 5 இராமேஸ்வரம் மீனவர்களுக்குத் தூக்கு தண்டனை விதித்தது இலங்கை நீதித்துறையல்ல. இலங்கையின் அதிபராக இருக்கும் ராஜபக்சதான். இலங்கையில் தமிழர் நலனுக்கு எதிராக இருப்பவர் ராஜபக்ச. உலக நாடுகளில் தங்களுக்கு இடையூறாக எதிராக இருக்கும் ஒரு அரசை அகற்றுவது வல்லரசுகள் பணி. அந்த வகையில் இலங்கையில் அதிபர் ராஜபக்சவை அகற்றிவிட்டு இந்தியாவுக்கு சாதகமான ஒரு அதிபரை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். எங்களைப் பொறுத்தவரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கமே. ராஜிவ் கொலையில் தூக்கு விதிக்கப்பட்ட மூவரது தூக்கு தண்டனையை நிறைவேற்றியே ஆக வேண்டும். – இவ்வாறு கூறினார்.

Tags: , ,

Leave a Reply