எதிரவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை பல விடயங்களை கருத்தில் கொண்டு தெரிவு செய்யப்பட வேண்டும் என இலங்கையின் இராஜதந்திரிகளில் ஒருவரான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளர் குறித்த அவரது கருத்தில், பொது வேட்பாளர் அனைத்து எதிர்க்கட்சிகளின் காத்திரத்தையும் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் எதிர்க்கட்சி வாக்காளர்கள் மத்தியிலும் மதிப்பை கொண்டிருக்க வேண்டும்.
அதேநேரம், குறித்த பொதுவேட்பாளர் ஏற்கனவே பெருமளவு வாக்கு வங்கியை கொண்டிருக்க வேண்டும்.
இந்தநிலையில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் 40வீத வாக்கு வங்கியை கொண்டுள்ள ஐக்கிய தேசியக்கட்சியே பொதுவேட்பாளர் நிலைக்கு பொருத்தமான வேட்பாளரை கொண்டிருக்கிறது என்பது யதார்த்தம்.
எனவே பொதுவேட்பாளருக்கு, ஜே.வி.பினர், ஜாதிக ஹெல உறுமயவினர், சந்திரிகா குமாரதுங்க மற்றும் மாதுலவேவ சோபித ஆகியோரின் முழுமை ஆதரவு கிடைக்கவேண்டும் என்றும் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
















