இன்றைய ராசி பலன் (2014.11.09)

astrology2மேஷம்
பணத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

ரிஷபம்
அம்பிகை வழிபாட்டால் இன்பம் காண வேண்டிய நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். கொள்கை பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். வீடு மாற்றம், இடமாற்றம், பற்றிய சிந்தனை மேலோங்கும்.

கடகம்
காதினிக்கும் செய்திகள் வந்து சேரும் நாள். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வீடு வந்து சேரும். வெளி வட்டார பழக்கம் விரிவடையும்.

சிம்மம்
வள்ளல்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்துதவ முன்வருவர். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

கன்னி
குறை சொல்லியவர்கள் கூட பாராட்டுகின்ற நாள். மருத்துவச் செலவுகள் குறைந்து மன நிம்மதியைக் தரும். கூட்டுத் தொழிலில் இருந்த குழப்பங்கள் மாறும். வர வேண்டிய பணம் வசூலாகும்.

துலாம்
இறை வழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத கவலைகள் ஏற்படலாம். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும்.

விருச்சகம்
முன்னேற்றம் கூடுவதற்காக எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். விருந்தினர் வருகை உண்டு. எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சி தரும்.

தனுசு
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். உத்தியோக அனுகூலம் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வர். கடன் சுமை குறையும்.

மகரம்
இடம் பூமியால் லாபம் கிட்டும் நாள். இல்லத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

கும்பம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். தாய்வழி உறவினர்களால் தக்க பலன் கிடைக்கும். வாகனம் பழுதுச் செலவுகள் குறையும். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள்.

மீனம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவாகும். வீட்டுச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

Tags: 

Leave a Reply