சான்பிராசிஸ்கோ நகரில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் திடீரென ஜன்னலை உடைத்துக்கொண்டு ஒரு நிர்வாண மனிதன் வீடுகளில் புகுந்து பலரை கடித்து காயப்படுத்துவதாக திடுக்கிடும் தகவல் ஒன்று சமீபத்தில் வெளிவந்தது. இதை உண்மை என்பது நேற்று நிரூபணமானது.
நேற்று சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள Brighton Avenue என்ற பகுதியில் ஒரு DeShon Marman என்பவரும் அவருடைய மனைவியும் தங்கள் வீட்டில் நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென அவர்களுடைய வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே வந்த நிர்வாண மனிதன் தூங்கிக்கொண்டிருந்த தம்பதிகளை கடித்து காயப்படுத்தியுள்ளான். பின்னர் அவர்களின் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த மர்ம மனிதனை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த மர்ம மனிதனிடம் விசாரணை செய்தபோது, அவருடைய பெயர் DeShon Marman என்றும் அவருடைய வயது 23 என்றும் தெரியவந்தது. அவர் பல கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணான பதிலை கூறியதால் அவருடைய மனநிலை குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இருப்பினும் அவர் மீது பல பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு அவரை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த மர்ம மனிதன் பிடிபட்ட பின்னர்தான் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.
















