யாழில் தடை விதித்த 59 ஐஸ்கிறீம், ஜூஸ் உற்பத்தி- விற்பனை நிலையங்களில் 29 நிலையங்கள் மீண்டும் இயங்கும்

ice-creamயாழ் மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்ட 59 ஐஸ்கிறீம், ஜூஸ் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் 29 நிலையங்கள் நாளை முதல் மீண்டும் செயற்படுவதற்கு வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை யாழ். வர்த்தக சங்கம் இன்று அறிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை தடைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றினை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையினில் இத்தடை நீக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யாழ். மானிப்பாய் வீதியிலுள்ள வர்த்தக சங்க கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பினில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.யாழ். வர்த்தக சங்கத் தலைவர் தடைநீக்கம் பற்றி தெரிவிக்கையினில் யாழ். மாவட்டத்தில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களினால் நடத்தப்படுகின்ற ஐஸ்கிறீம், ஜூஸ் மற்றும் உப உணவு உற்பத்தி நிலையங்களில் 59 நிலையங்களுக்கு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வர்தகர்கள் வணிகர் கழகத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 27ஆம் திகதி மேற்படி வர்த்தகர்களை அழைத்துப் பேசியிருந்தோம். தொடர்ந்து கடந்த 30 ஆம் திகதி மாகாண சுகாதார அமைச்சர் மற்றும் பணிப்பாளர் ஆகியோருடனும் கலந்துரையாடியிருந்தோம்.

இதனைத் தொடர்ந்து அக் கூட்டத்தில் பல்வேறு திர்மானங்களும் எடுக்கப்பட்டன. இதற்கமைவாக சுகாதார சேவைகள் திணைக்களம் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இதன் முதற்கட்டமாக 29 ஐஸ்கிறீம் மற்றும் யூஸ் உற்பத்தி விற்பனையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இதேபோன்று, தடை விதிக்கப்பட்ட ஏனைய நிலையங்களும் அடிப்படைச் சுகாதார வசதிகளை எதிர்வரும் இரு வாரத்திற்குள் ஏற்படுத்திக் கொண்டால் அவற்றையும் மீள இயங்க மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் அறிவித்துள்ளதாக ஜெயசேகரம் மேலும் தெரிவித்தார்.

Tags: ,

Leave a Reply