நைஜீரிய பள்ளியில் பிரார்த்தனை நடந்தபோது வெடித்த மனித வெடிகுண்டு. 48 மாணவர்கள் உடல் சிதறி பலி.

nigeria-school-suicide-bombநைஜீரியா நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி அப்பள்ளி மாணவர்கள் 48 பேர் பரிதாபமாக பலியாகினர். இதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நைரீஜியாவில் போகோஹராம் தீவிரவாதிகளில் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. நேற்று நைஜீரியாவில் உள்ள Potiskum in Nigeria’s Yobe state என்ற பகுதியில் Government Comprehensive Senior Science Secondary School, என்ற பள்ளியில் காலை எட்டு மணிக்கு பள்ளி தொடங்குவதற்கு முன்னர் நடந்த பிரார்த்தனையில் ஒரு மர்ம மனிதன் திடீரென நுழைந்து தன்னுடைய உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான்.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் சம்பவ இடத்திலேயே அந்த பள்ளியின் 48 மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கை, மற்றும் கால்கள் சிதறி படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகின்றனர். காயமடைந்த பல மாணவர்களின் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை எனினும், இந்த தாக்குதலின் பாணியை வைத்து பார்க்கும்போது இது போகோஹராம் தீவிரவாதிகளின் வேலையாகத்தான் இருக்கும் என நைஜீரிய போலீஸார் கருத்து தெரிவித்தனர்.

Tags: , ,

Leave a Reply