தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் பொது வேட்பாளருக்கு ஆதரவு – TNA

suresh-premachandran1தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கூடிய பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு அளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றவும், காணி அபகரிப்புக்களை தடுக்கவும், இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை மீள்குடியேற்றவும் நடவடிக்கை எடுக்கக் கூடிய ஒரு பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் ஒருவரையே கட்சி ஆதரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க அல்லது கரு ஜயசூரிய அல்லது வேறு யாராகவும் பொது வேட்பாளர் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கக் கூடியவராக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றமொன்றை அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அடிப்படை அவசர பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என்ற உறுதிமொழியையேனும் பொது வேட்பாளர் அளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளாh. 18 தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தபட்டுள்ளதாகவும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் அது சர்வதேச மத்தியஸ்தத்துடன் நடத்தப்பட வேண்டுமென்பதே கட்சியின் நிலைப்பாடு எனவும், அண்மையில் இது குறித்து கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் தெளிவுபடுத்தியருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுய நிர்ணய உரிமைகளை பெற்றுக்கொள்ள அடி பணிய வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் குறைந்தபட்சம் ஜனாதிபதி தேர்தலின் போதேனும் ஆதரவளிக்குமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ கோரியிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply