புதிய நாணயக் குற்றியில் நல்லூர் ஆலயம்

10 rupee nallur இலங்கையின் 25 மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்தினதும் தனித்துவம் வாய்ந்த பண்புகளையும் முக்கியத்துவம் மிக்க அடையாளங்களையும் அங்கீகரித்து அவற்றினை விபரணப்படுத்தும் பொருட்டு இலங்கை மத்திய வங்கி 10 ரூபா நாணயக்குற்றிகளைக் கொண்ட புதிய தொடரொன்றினை வெளியிட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் நல்லூர் ஆலய முகப்பையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடா கடற்கரை மற்றும், பாடும் மீன்களையும், கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்களஞ்சியத்தையும், மன்னார் மாவட்டத்தில் மடுமாதா தேவாலயத்தையும், திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர விகாரை, கோணேஸ்வரம் கோவில், பள்ளிவாசல் ஆகியவற்றையும், முல்லைத்தீவு மாவட்டத்தில், மீன்பிடியையும், வவுனியா மாவட்டத்தில் நெல் மற்றும் மரக்கறி உற்பத்தியையும் குறிக்கும் வகையில் நாணயக் குற்றிகள் அச்சிடப்பட்டுள்ளன.

Tags: ,

Leave a Reply