மேஷம்: காலை 8 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். அடுத்தவர் களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.
உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. போராட்டமான நாள்.
ரிஷபம்: மறைந்து கிடந்த திறமைகளை வெளிப் படுத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப் பார்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில புதுமை களை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர் களால் ஆதாயமடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.
சிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். திட்டமிட்ட காரியங் களை சிறப்பாக முடிப் பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டா கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்ப வர்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். வெற்றி பெறும் நாள்.
துலாம்: காலை 8 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து போகும். குடும்பத்தில் அமைதி திரும்பும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
விருச்சிகம்: காலை 8 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமை யால் பதட்டமடைவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
தனுசு: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளை களிடம் பரிவாகப் பேசுங்கள். திடீர் பயணங்கள், செலவு களால் திணறுவீர்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
மகரம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறை வேற்று வீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப் பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.
கும்பம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளை கள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியா பாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.
மீனம்: காலை 8 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
















