தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தாலோ இல்லாவிட்டாலோ தமிழ் மக்கள் எதிர்க்கட்சி வேட்பாளருக்கே வாக்களிப்பர்: சுரேஸ்

suresh-premachandran1ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளருக்கான தேர்தல் பிரச்சாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடாது. எனினும் ஜனநாயகம் மற்றும் நியாயமான தேர்தலுக்காக பொதுக்கூட்டமைப்புடன் தமிழ்க் கூட்டமைப்பு இணைந்து செயற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்காது. எனினும் தமிழ்க் கூட்டமைப்பு இருந்தாலோ இல்லாவிட்டாலோ பெரும்பான்மை தமிழர்கள் எதிர்க்கட்சி வேட்பாளருக்கே வாக்களிப்பர் என்று அவர் ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தமது கட்சி தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவசரமாக வெளியிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மைத்திரிபால ஜனாதிபதியாக தெரிவானால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பார் என்ற நம்பிக்கையை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அண்மையில் வெளியிட்டதாக ஆங்கில இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply