அரசாங்கத்தை அமைச்சர்கள் கெட்டவார்த்தையில் திட்டித் தீர்க்கின்றனர்: சம்பிக்க

sambikka-ranavakkaஅமைச்சர்கள் அரசாங்கத்தை கடுமையான கெட்டவார்த்தையில் திட்டித் தீர்ப்பதாக முன்னாள் அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தில் அதிகளவில் அமைச்சர்கள் அங்கம் வகித்து வருவதாகத் தெரிவித்து மக்கள் கடுமையான அமைச்சர்களை திட்டுகின்றனர். குறை சொல்கின்றனர்.

கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியின் போது ஒரு சில வர்த்தகர்கள் இந்த அரசாங்கத்தை பணயமாக பிடித்துக் கொண்டுள்ளமையை நாம் புரிந்து கொண்டோம்.

அரசாங்கத்திற்கு உள்ளேயும் ஒன்றாக இணைந்தும் நாம் இதற்கு எதிராக போராட்டம் நடத்தினோம். பலன் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த இழிவான செயல்களில் ஈடுபடுவதனை அரசாங்கம் நிறுத்திக் கொள்ளத் தயாரில்லை. எனவே நாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறினோம்.

மக்களின் சுயகௌரவத்தை நிலைநாட்ட நாம் ஓர் மனிதாபிமான மீட்புப் பணியொன்றை மேற்கொள்ளத் தீர்மானித்தோம்.

மாதத்திற்கு ஆறு மாதம் மட்டுமே பெரும் எண்ணிக்கையிலான அமைச்சர்களின் அமைச்சுக்கள் இயங்குகின்றன.

சிலரின் அமைச்சுக்கள் மட்டும் வருடம் முழுவதும் இயங்குகின்றன. ஏனையவர்களின் அமைச்சுக்களை நடாத்திச் செல்ல பணமில்லை.

அமைச்சர் ஒருவருக்கு துறைசார் திணைக்களமொன்றின் தலைவரை நியமிக்கக் கூட அதிகாரமில்லை. இந்த அமைச்சர்களை அரசாங்கத்தை விட்டு வெளியேற்ற தூதரகங்களின் பணத்தை செலவிட வேண்டியதில்லை.

பெரும் எண்ணிக்கையிலான அமைச்சர்கள் அரசாங்கத்தை கடுமையான கெட்ட வார்த்தையில் திட்டித் தீர்க்கின்றனர்.

அமைச்சர்கள் சகாமல் செத்துக் கொண்டே அமைச்சுப் பதவிகளை வகித்து வருகின்றனர் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஜாதிக ஹெல உறுமய கட்சியின் விசேட கூட்டத்தில் அவர் இந்தக் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply