பள்ளி மாணவனுடன் உடலுறவு கொண்ட ஆசிரியைக்கு 17 ஆண்டுகள் சிறை!

school-student-sex-teacher-16-years-old-boy-america-prison-linda-hardanஅமெரிக்காவை சேர்ந்த லிண்டா ஹார்டன் என்ற ஆசிரியை, 16 வயது மாணவனுடன் உடலுறவில் ஈடுபட்டதற்காக அவருக்கு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள மான்செஸ்டர் உயர் நிலைப்பள்ளியில் 21 வயதுடைய லிண்டா ஹார்டன் என்ற பெண், அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

இவர் அதே பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவரைக் கடந்த 20ஆம் தேதி அழைத்துச் சென்று, நிறுத்தப்பட்ட கார் ஒன்றில் உடலுறவு கொண்டுள்ளார்.

இது, பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிய வந்ததையடுத்து, இவர் மீது காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், லிண்டா ஹார்டனைக் கைது செய்தனர்.

பின்னர், இவர் கடந்த 22ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இவருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 2,50,000 டாலர்கள் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply