இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் மீண்டும் விவாதம்

uk_flagஇலங்கை விவகாரம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் மீண்டும் விவாதம் நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் மாதத்தில் இந்த விவாதம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு மாத கால இடைவெளியில் நடைபெறவுள்ள இரண்டாவது விவாதம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் குறித்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதி விவாதம் நடைபெறவுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமை, ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கடந்த வாரம் விவாதம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேர்தல் கண்காணிப்பு முறைமை குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply