விலைக்கு வாங்கக்கூடிய அமைச்சர்கள் எவரும் இனி இல்லை: ஜனாதிபதி

mahinthaவிலைக்கு வாங்கக்கூடிய அமைச்சர்கள் எவரும் இனி இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பவுண்ட்கள் மற்றும் டொலர்களுக்கு விலை போகக் கூடிய எவரும் அமைச்சரவையில் இனி கிடையாது.

என்னை ஹேக் சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.

பேய்களுக்கு பயம் என்றால் சுடுகாட்டில் வீடுகள் அமைக்க மாட்டோம்.

என்னை தோற்கடிப்பது அவ்வளவு சுலமான காரியமல்ல என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்க்கைக்கு 25 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று இன்று உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply