இன்றைய ராசிப் பலன்கள் 02.12.2014

astrology7மேஷம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் சச்சரவு வரும்.

வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரியால் மறைமுக பிரச்னைகள் வரக்கூடும். முன் யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நீண்ட நாளாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.

மிதுனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். எதிர் பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். மதிப்பு கூடும் நாள்.

கடகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். எதிர்பாராத இடத் திலிருந்து உதவி கிட்டும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். தள்ளிப் போன விஷ யங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகும் நாள்.

கன்னி: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடை யும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத் தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடு வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.

விருச்சிகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். செலவு
களை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்யோ கத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

தனுசு: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த- பந்தங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

கும்பம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் அதிகரிக் கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத்தூக்கும். முன்கோபத்தால் பகை உண்டாகும் வாகனத் தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் மந்த மாக இருக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

Tags: 

Leave a Reply