புலிகள் தடை நீக்க உத்தரவை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு மேன்முறையீடு

un_geneva_flagsதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மேன்முறையீடு செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய பணியகம் இன்று (02) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இது தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைந்து கொண்ட முறை தவறானது என்று ஐரோப்பிய நீதிமன்றம் கடந்த ஒக்ரோபர் மாதம் 16ம் திகதி வெளியிட்ட உத்தரவில் கூறியிருந்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராகவே, ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவினால் மேல்முறையீடு செய்யப்படவுள்ளது.

Tags: , ,

Leave a Reply