இன்றைய ராசி பலன் (2014.12.04)

astrology7மேஷம்
பிரதோஷ வழிபாட்டால் பெருமை காண வேண்டிய நாள். விலகிச் சென்றவர்கள் வீடு தேடி வருவர். பெண்வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வருங்கால நலன் கருதிப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

ரிஷபம்
சிவாலய வழிபாட்டால் சிந்தை மகிழும் நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். நீண்ட நாளைய வழக்குகளில் வெற்றி கிட்டும். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். மருத்துவச் செலவு குறையும்.

மிதுனம்
அனுபவ அறிவால் அற்புதமான பலன் காணும் நாள். வாங்கல், கொடுக்கல்களில் வளர்ச்சி கூடும். நண்பர்களின் ஒத்துழைப்போடு புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

கடகம்
வங்கிகளில் வைப்பு நிதி உயரும் நாள். தொலைந்த பொருள் கைக்கு வந்து சேரும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் சந்திப்பு நல்ல செய்தியைத் தரும். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

சிம்மம்
தனவரவு அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் சந்தோஷம் தரும் சம்பவம் நடைபெறும். செல்வந்தர்களின் உதவியோடு கடன் பிரச்சினைகள் அகலும். பழகிய நண்பர்களால் பகல் நேரத்தில் சிறு ஏமாற்றத்தைச் சந்திப்பீர்கள்.

கன்னி
இறைவழிபாட்டினால் இனிமை காண வேண்டிய நாள். பூர்வீக சொத்துக்களில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். தொலைதூரப் பயணத்தின் பொழுது எச்சரிக்கை தேவை. மறதி அதிகரிக்கும்.

துலாம்
தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் நாள். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கையை விரிக்கலாம். வேலைமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

விருச்சகம்
நந்தீஸ்வரர் வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள். பொருளாதார நிலைஉயரும். நண்பர்களின் நல்லாதரவோடு தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். கோவில் வழிபாட்டில் குதூகலம் காண்பீர்கள்.

தனுசு
சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் நாள். வரவும், செலவும் சமமாகும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். குடும்பத்தில் நல்ல மங்கல நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

மகரம்
செல்வாக்கு உயரும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியங்களைச் செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர்கள் விரும்பி வந்து சேருவர்.

கும்பம்
சிவ&பார்வதி வழிபாட்டால் செல்வ வளம் கூடும் நாள். உறவினர்கள் போற்றும் விதத்தில் புதிய தொழில் தொடங்குவீர்கள். வேலைப்பளு குறையும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.

மீனம்
முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு வாய்ப்பு தானே தேடிவரும். பணம் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.

Tags: 

Leave a Reply