ஆளும் கட்சியின் வாக்குறுதிகளை நம்பமுடியாது; சம்பிக்க ரணவக்க

sambikka-ranavakkaஆளும் அரசு, அரசியலமைப்பில் திருத்தம் செய்யாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை அறிமுகச் செய்யவுள்ளதாக அரசு தற்போது பரப்புரை செய்து வருகின்றது. எனினும் இந்தப் பரப்புரையை ஏற்றுக்கொள்ள முடியாது.

போர் வெற்றியின் பின்னர் அரசியல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் காணப்பட்டது.

இந்த பலத்தைப் பயன்படுத்தி அரசியல் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்ய அரசு முனைப்புக் காட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பில் எந்தவகையில் மாற்றம் செய்யப்பட்டாலும் அதற்கு ஜாதிக ஹெல உறுமய பூரண ஆதரவளிக்கும். தேர்தலின் பின்னர் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் வாக்குறுதி அளித்து வருகின்றனர்.

குறிப்பாக நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழப்பெரும, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் வாக்குறுதி அளித்து பரப்புரை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,

Leave a Reply