வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்திலிருந்து விலகப் போவதாக பசில் அறிவிப்பு

basilவடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்திலிருந்து விலகப் போவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். வட மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக முக்கியமான அபிவிருத்தித் திட்டமான வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் தி;ட்டப் பணிகளிலிருந்து விலகிக் கொள்ள உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த அபிவிருத்தித் திட்ட பொறுப்புக்களை வட மாகாணசபையில் ஆட்சி பீடமேறும் புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் 22ம் திகதி வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டம், மாகாணசபை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமது சொந்தப் பிரதிநிதிகளை நியமிக்கும் அரிய சந்தர்ப்பம் வடக்கு வாக்காளர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருண்ட எதிர்காலத்திற்கு தங்களை இட்டுச் செல்வதாக, அல்லது அபிவிருத்தியும் செழிப்புமிக்க புதியதோர் எதிர்காலத்தை நோக்கி நகர்வதாக என்பதனை வடக்க மக்களே நிர்ணயிக்க வேண்டுமென அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply